பொதுமக்கள் மீது மோதிய கார்: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

0
87

தென் கொரிய தலைநகர் சியோலில் மக்கள் மீது கார் மோதியதில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இரவு 09.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதசாரி கடவையில் பயணித்தவர்கள் மீது கார் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்தில் அறுவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன் போது மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சியோல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது,