பொன்சேகாவின் அவதாரம்?

0
416

பொன்சேகா, அரசியலில் புதிய அவதாரமொன்றை எடுப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றார். ராஜபக்ஷக்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, இறுதி யுத்தத்தை வழிநடத்திய பொன்சேகா, உள்முரண்பாடுகளின் காரணமாக, ராஜபக்ஷக்களுக்கு எதிராக அரசியலுக்குள் பிரவேசித்தார். 2010 ஜனாதிபதி தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் களமிறங்கி தோல்வியடைந்தார். யுத்த வெற்றிவாதத்தை பங்கு போடு
வதன் மூலம் ராஜபக்ஷக்களை தோற்கடிக்கும் வியூகத்திற்கே பொன் சேகா பயன்படுத்தப்பட்டார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவுதான் அவரின் மோசமான தோல்விக்குக் காரணமென்று இப்போதும் பல சிங்களவர்கள் நம்புகின்றனர்.
ராஜபக்ஷக்களால், தென்னிலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர் என்றால் – அது நிச்சயமாக சரத் பொன்சேகா என்பதில் ஐயமில்லை. ஏனெனில், மகிந்த ராஜபக்ஷ பொன்சேகாவை சிறைப்படுத்தி, அவரின் குடியுரிமையையும் இல்லாமலாக்கினார். 2015 ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொன்சேகாவுக்கு வாழ்வளித்து, 2016இல் தேசியப் பட்டியல் மூலம், பாராளுமன்றத்திற் குள்ளும் பிரவேசித்தார்.
அடிப்படையில் பொன்சேகாவே இறுதி யுத்தம் தொடர்பான சகல குற்றசாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டியவர். ஏனெனில், இறுதி யுத்தம் அவரின் கட்டுப்பாட்டில்தான் வழிநடத்தப்பட்டது. ஆனால், 2010 ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்களின் ஆதரவை பெற்றதால், மிகவும் தந்திரமாக, போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச பார்வையிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். ஆனாலும் இலங்கை இராணுவத்தின் மீதான எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் பொன்சேகா ஏற்றுக்கொண் டதில்லை. அதேவேளை, இனப்படுகொலை குற்றச்சாட்டை தொடர்ந்தும் வலுவாக எதிர்த்துவரும் பொன்சேகா, அவ்வாறானதொரு குற்றம்
இடம்பெற்றிருப்பின், தமிழ் மக்கள் எவ்வாறு தனக்கு வாக்களித்திருக்க முடியுமென்னும் கேள்வியை முன்வைத்து, தமிழ்த் தேசியவாதிகளின் குரல்களை பலவீனப்படுத்தி வருகின்றார். தர்க்க ரீதியில் நோக்கினால் பொன்சேகாவின் வாதம் பலமானது. இதனை அப்போது கூட்டமைப் பினரால் புரிந்துகொள்ள முடியவில்லையா?
அரசியலில் பொன்சேகாவால் பெரியளவில் வெற்றி பெறமுடியவில்லை.
பிரதான கட்சிகளை சார்ந்துதான் அவர் அரசியலைக் கையாள வேண்டியிருக்கின்றது. இந்த நிலையில்தான், பொன்சேகா புதியதோர் அவதாரத்தை எடுக்க முயற்சிக்கின்றார். அதாவது, ரணில் விக்கிரமசிங் கவுக்கு எதிரான போராட்டக்காரர்களின் (அறகலய) ஆதரவுடன் தன்னை அரசியலில் புதிதாக ஸ்தாபித்துக் கொள்ள முயற்சிக்கின்றார். காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் எந்தவோர் அரசியல்வாதியையும் அனுமதிக்க வில்லை. ஆனால், சரத் பொன்சேகாவை பேசுவதற்கு அனுமதித்திருந் தனர். இந்தப் பின்னணியில்தான், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சூளுரைத் திருக்கின்றார்.
இதிலுள்ள முக்கியமான விடயம், போராட்டக்காரர்களின் அரசியல் பொன்சேகாவின் வசமாகப் போகின்றது. ராஜபக்ஷக்களுக்கு எதிரான போட்டத்தை தன்வசப்படுத்தினால், அதன் மூலம் புதியதோர் அரசியல் அவதாரத்தை எடுக்கலாமென்று பொன்சேகா ஒரு கணக்கைப் போடு கின்றார். அவர், கணக்கில் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் அவ ரின் பிரச்னை. ஆனால், ஒரு விடயம் மட்டும் உண்மை. அதாவது, இப் போது நடைபெறும் எந்தவொரு விடயமும், தமிழ் மக்களின் நலன்களுடன் தொடர்பானதல்ல. தமிழ் மக்களுக்கு இப்போதைய தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் ஒரு விடயமுமில்லை. எனவே, எவர் கொழும்
பின் அதிகாரத்தை கைப்பற்றினாலும் அவர்களுடன் முட்டி மோதும் அரசியலே தமிழ் மக்களுக்கு எஞ்சப் போகின்றது.