பொரலஸ்கமுவ முச்சக்கர வண்டி திருட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது

0
174

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சந்தேகநபர்களால் முன்னர் திருடப்பட்ட 03 முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்ட தெஹிவளை, நாவலப்பிட்டி, ரொசெல்ல, ஹட்டன் மற்றும் கொட்டகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த குழுவினர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.