அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை பொருளாதாரத்தில் வலுவடையச் செய்யும் நோக்குடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரனினால் பயனாளிகளிடம் ஆடுகள் கையளிக்கப்பட்டன. 07 பயனாளிகளுக்கு விவசாய அமைச்சின் ஊடாக தலா ஒரு குடும்பத்திற்கு 75ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எம்.அரசரெத்தினம், திட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.