பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேவாகம பகுதியில் நேற்று புதன்கிழமை (31) காலை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, சேவாகம பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.
இவர் தனது வேட்டை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது காணிக்குச் சென்ற போது கால் தடுக்கி கீழே தவறி வீழ்ந்ததில் கையிலிருந்த துப்பாக்கி வெடித்துக் காயமடைந்துள்ளதாக அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர் வர்த்தகரொருவர் என்பதுடன் கடன் பிரச்சினை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது விபத்தா அல்லது உயிரை மாய்த்துக்கொள்வதற்கான முயற்சியா என்பது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.