பொலன்னறுவை – மனம்பிட்டிய – வெலிகந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையிலும் ஏனையோர் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் அரிசி ஆலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.