யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது பொலித்தீன் பை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனுள் எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன.
அந்தப் பொலித்தீன் பை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே அது பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.