உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோஜ் குமார் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (4) அதிகாலை காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.’ஃபேஷன்’ என்ற திரைப்படம் மூலம் 1957 ஆம் ஆண்டில் மனோஜ் குமார் திரையுலகில் அறிமுகமானார்.
‘காஞ்ச் கீ குடியா’, ‘பியா மிலன் கி ஆஸ்’, மற்றும் ‘ரேஷ்மி ரூமல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார். பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனைக்கான பால்கே ரத்னா விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.