பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது

0
134

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டம்பே சந்தியிலுள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பேராதெனிய மற்றும் பொல்கொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30 வயது பெண்ணும் 46 வயது ஆணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் குறித்த விளையாட்டரங்குக்குள் ஒரு தரப்பினர் உள்நுழைய முற்பட்டபோது பொலிஸ் அதிகாரி அதனை தடுத்துள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.