Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.நுகேகொடைக்கும் ஹெட்டியாவத்தைக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சாரதிக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு குறித்த பொலிஸார் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் அதிகாரிக்கு பேருந்து நடத்துனராக கடமையாற்றிய அதன் உரிமையாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.காணொளியின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.