போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்திருந்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும் – விமலவீர திசாநாயக்க எம்.பி

0
114

நாட்டில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்திருந்திதால் நாட்டுக்கு சுற்றலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து இருக்கும். இதனூடாக நாட்டின் வருமானமும் அதிகரித்து இருக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்திருந்திதால் நாட்டுக்கு சுற்றலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து இருக்கும். இதனூடாக நாட்டின் வருமானமும் அதிகரித்து இருக்கும்.

ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும்.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை நாம் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். நாட்டில் முன்னெடுக்கப்படும் சிறந்த விடயங்கள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இவற்றுக்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதாகக் கூறப்படுகின்றது.

எனினும் அவ்வாறான எந்த சுகபோகங்களையும் நாம் அனுபவிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைக்கு அமைவாக சில வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற ஊழியர்களுக்கு 100 ரூபாய்க்கே உணவுப்பொதி வழங்கப்படுகின்றது. அவை அனைத்தையும் கணக்கிட்டு ஒத்துமொத்த செலவீனங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் சுமத்துகின்றனர்.

நாங்களே உண்டு குடித்ததாகக் கூறுகின்றனர். இது நியாயமான விடயமா என்றே நான் கேட்கின்றேன்.