28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போராட்டத்தை பயன்படுத்தி, ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சியில் ஜனாதியானாரா?

போராட்டக்களத்தை பயன்படுத்தி ஜனாதியாவதற்கான சூழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாம், அவசரகால சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் பல தொழிற்சங்கங்களை சந்தித்துள்ளோம். அடுத்ததாக மேலும் பல சங்கங்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். போராட்டத்தை முடக்குவதற்கு அவசரகால சட்டம் தேவையில்லை. எனினும் அந்த நோக்கில் தற்போதைய சூழலில் பலர் குறிப்பாக அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், போராட்டங்களுடன் தொடர்புப்படாவிட்டாலும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அபோராட்டத்தை முடக்குவதற்கு அவசரகால சட்டம் தேவையில்லை என்பதை ரணில் விக்கிரமசிங்கவே, கடந்த மே மாதம் 09ஆம் திகதி அவர் எதிர்க் கட்சியில் இருக்கும்போது தெளிவான கருத்தை முன்வைத்திருந்தார். மே 09ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மட்டுமல்ல முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கூட அவர் கூறியிருந்தார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக ஏதேனும் ஒருவகையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி போராட்டக்கார்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டால் எதிர்க் கட்சியலிருந்து கொண்டு அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை இனி வழங்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார். போராட்டக்காரர்களை முடக்குவதற்காக அவசரகாலசட்டம் கொண்டுவரப்பட கூடாது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருந்தார். அவ்வாறு கூறிய ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாகி 24 மணித்தியாலங்கள் ஆகுவதற்குள் அவசரகாலசட்டத்தை அமுல்படுத்தியதானது வேறு ஒரு நோக்கத்துக்கானதா என்றே கேட்கத் தோன்றுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அவசரகாலசட்டம் பயன்படுத்தப்பட்டால் அந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியவர் ஜனாதிபதயானவுடன் அவரசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவா அவர் அவ்வாறு கூறினார் என்றே கேட்கவிளைகின்றோம். தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிவிடலாம் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு இருந்தார் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. போராட்டக்களத்தை பயன்படுத்தி ஜனாதியாவதற்கான சூழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டாரா என்ற சந்தேகமும் உள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles