போராட்டத்தை முடக்குவதற்கு அவசரகால சட்டம் தேவையில்லை. எனினும் அந்த நோக்கில் தற்போதைய சூழலில் பலர் குறிப்பாக போராட்டக்காரர்கள், போராட்டங்களில்; தொடர்புப்படாவிட்டாலும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் என்று, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
போராட்டக்களத்தை பயன்படுத்தி ஜனாதியாவதற்கான சூழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாம், அவசரகால சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் பல தொழிற்சங்கங்களை சந்தித்துள்ளோம். அடுத்ததாக மேலும் பல சங்கங்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.