தொடர் போருக்கு மத்தியில் ஓர் இடைவெளி விடுவது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “இஸ்ரேல் தனது முடிவை அறிவித்துள்ளது. அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடர் போருக்கு மத்தியில் ஓர் இடைவெளி விடுவது என்ற இஸ்ரேலின் முடிவு சரியான திசையில் வைக்கப்பட்டுள்ள முதல் அடி.
இதன் மூலம், அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்” என தெரிவித்துள்ளார்.