போரில் ரஷ்யா தோற்க வேண்டும்: மேக்ரான் திட்டவட்டம்

0
83
TOPSHOT - Ukrainian soldiers adjust a national flag atop a personnel armoured carrier on a road near Lyman, Donetsk region on October 4, 2022, amid the Russian invasion of Ukraine. Ukraine's President Volodymyr Zelensky said on October 2, 2022 that Lyman, a key town located in one of four Ukrainian regions annexed by Russia, had been "cleared" of Moscow's troops. (Photo by Anatolii Stepanov / AFP) (Photo by ANATOLII STEPANOV/AFP via Getty Images)

ரஷ்யா- உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்யா மக்களுடன் அல்ல.

குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும். உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் இராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், நேரடியாக மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.