ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நீடிக்கும் போரை, முடிவுக்கு கொண்டுவருவதற்கு, நாடுகள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்போம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஸ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கு விஜயம் செய்தமை சர்வதேச ரீதியில் முக்கிய கவனத்தைப் பெற்றுக்கொண்டது. மோடியின் முயற்சி தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைபேசி ஊடாக கேட்டறிந்தார். ஜோ பைடன்- மோடியிடையிலான தொலைபேசி ஊடாடல்கள் தொடர்பில், அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு தொடர்;பு
ஆலோசகரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துள்ள அவர், உக்ரைன் ஜனாதிபதியின் சிறப்புரிமைகள், உக்ரைன் மக்களின் சிறப்புரிமைகள், நியாயமான அமைதிக்கான திட்டத்திற்கு இணங்க, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இருந்தால், அத்தகைய பங்கை நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்’ என பதிலளித்துள்ளார்.