24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு – ஒரே நாட்டிற்குள் பல மோதல்கள் – நோர்வே அமைப்பு

சர்வதேச அளவில் உள்நாட்டு மோதல்கள் , போர்களங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்று தசாப்தங்களில் இல்லாதவாறு அதிகரித்துள்ளமை புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பியாவின் டைகிரே பிராந்தியத்திலும் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு காரணமாகவும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாகவும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என ஒஸ்லோவின் சமாதான ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனினும் முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும்போது மோதல்கள் காரணமாக உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் குறைவடைந்திருந்தது என தெரிவித்துள்ள ஒஸ்லோ அமைப்பு எனினும் 2023 இல் 122,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,உக்ரைனில் 73.000 பேரும் காசாவில் 23,000 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

உலகில் இடம்பெறும் மோதல்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது,34 நாடுகளில் 59 மோதல்களங்கள் காணப்படுகின்றன என நோர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் வன்முறை உச்சத்தில் உள்ளது மோதல் நிலப்பரப்பு சிக்கலான முறையில் மாற்றமடைந்துள்ளது என இந்த அறிக்கையை தயாரித்துள்ள பேராசிரியர் சிறி ஆஸ் ரஸ்டாட் ஒருநாட்டிற்குள்ளேயே பலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மிகவும் வன்முறை மிகுந்த மோதல்களை காண்கின்றோம்,அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என தெரிவித்துள்ள அவர் இது சர்வதேச போட்டியாக மாறியுள்ளது யார் யாரை ஆதரிப்பது என்ற நிலை காணப்படுகின்றது இது மிகவும் சவாலன சர்வதேச சூழ்நிலையை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் மிகவும் குழப்பகரமானவையாக வந்துள்ளன,அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மோதல்கள் இடம்பெறுகின்றன,ஏழு நாடுகளில் ஒரே நேரத்தில் மூன்று மோதல்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

மத்தியகிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐஎஸ் அமைப்பும் ஏனைய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் காணப்படுவது இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles