24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்- ஏற்குமா இஸ்ரேல்?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது . இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் – இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது.
காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles