போலி கையொப்பமிட்ட பொலிஸ் பரிசோதகர் கைது

0
90

பொலனறுவை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் அரச பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் கையொப்பத்தை போலியாக இட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு போலி ஆவணம் ஒன்றை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொலனறுவையைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.