போலி வாக்குறுதிகளால் நாடு நெருக்கடியை சந்திக்கும் என துமிந்த நாகமுவ தெரிவிப்பு!

0
32

பொதுவான கொள்கை இல்லாமல் போலியான வாக்குறுதிகள் வழங்கப்படுவதால் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆட்சியமைக்கும் எதிர்பார்ப்பில் போலியான வாக்குறுதிகள் ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்படுகின்றன. மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நிறைவேற்ற முடியாத விடயங்களை முன்வைக்கின்றனர்.
கொள்கை இல்லாமல் செயற்படுவதால் நாடு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

வரிசை யுகத்தை இல்லாமல் செய்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். அவ்வாறெனின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள மிக நீண்ட வரிசையை உருவாக்கியவர் யார் என்பதை நாம் கேட்க விரும்புகிறோம். சஜித் மற்றும் அநுர ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து தெளிவற்ற தன்மை காணப்படுகிறது. இவ்வாறானோர் குறித்து மக்கள் தெளிவுபெற வேண்டும்.