பௌத்த பிக்குகளை தடுக்காத வரை பிரச்சினைதான்! : இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் கருத்து!

0
197

நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு, அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும் எனவும், பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை, வெடுக்குநாறிமலை போன்ற சம்பவங்கள், தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும், சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த 8 ஆம் திகதி, சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களுக்கு, பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர், அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆலய பூசகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை, வரவேற்க முடியும்.

இருப்பினும், சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு, அரசாங்கம் வலியுறுத்தும் வரையிலும்,
வட, கிழக்கு மாகாணங்களில், காணிகளை அபகரிப்பதனையும், இன- மத பரம்பலை மாற்றியமைப்பதனையும் இலக்காகக்கொண்டு, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும், இவ்வாறான மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.