பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி தினமாக உள்ள போதிலும்இ பெரும்பாலான விகாரைகளின் விகாராதிபதிகள் விகாரைகளை வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன.
விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவட்தாட்சி அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை மாவட்ட தெரிவட்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்றும் (04) இடம்பெற்றதுடன் தபால் மூல வாக்குகளைக் அடையாளப்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இம்மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.