30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மகனை கொன்ற தாய்..! காரணம் வௌியானது!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வாழ்கின்றனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் திகதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் உணவகம் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் திகதி காலை உணவக அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, இரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து உணவக நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த உணவக நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உணவகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில், சுசானா சேத் உணவகத்துக்கு வந்தபோது அவருடன் இருந்த 4 வயது மகன், வெளியே செல்லும்போது உடன் இல்லாதது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொலிசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரை தொடர்புகொண்டு பேசியபோது, கார் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்றுகொண்டிருப்பதும், காரில் சுசானா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும், கார் ஓட்டுநரை அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு பொலிசார் கூறியுள்ளனர்.

அதன்படி, கார் ஓட்டுநர் ஜமங்கலா பொலிஸ் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். அங்கு கோவா பொலிசார் கொடுத்த தகவலின்படி, காரை பொலிசார் சோதனை செய்தனர்.  அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, வெங்கட்ராமன் பணி விஷயமாக இந்தோனேசியாவுக்கு சென்றுவிட்டார். மேலும், சுசானா சேத்துக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் செல்போன் வீடியோ அழைப்பு மூலம் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 6 ஆம் திகதி சுசானா சேத் தனது மகனுடன் கோவா சென்றுள்ளார். அப்போது மறுநாள் அதாவது கடந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்துள்ளார். ஆனால், சுசானா சேத் அந்த அழைப்பை எடுத்துப் பேசி, தனது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

இருப்பினும், வெங்கட்ராமன் அடிக்கடி சுசானா சேத்தை செல்போனில் அழைத்தபடி இருந்துள்ளார். அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்தான். இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles