





மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் சுயதொழில் முனைவோரின் கண்காட்சி மற்றும் விற்பனை இடம்பெற்றிருந்ததுடன், அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 10 பேர் மகளிருக்கு கௌரவமளிக்கப்பட்டது.
மேலும் மகளிர் பெருமை கூறும் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் நங்கை என்னும் வருடாந்தச் சஞ்சிகையும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தினர், மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.