மகள் காதலனுடன் சென்றதனால் தாய் தவறான முடிவு!

0
8

மகள் காதலனுடன் சென்றதனால் மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில், அவரது உடலை கூட பெறுவதற்று மகள் முன்வராத சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளது. 

பருத்தித்துறை வீதி, நல்லூரைச் சேர்ந்த வரதராஜன் கலா (வயது  44) நல்லூர் குறுக்கு வீதியில் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், அவரது மகள் காதலுடன் சென்ற நிலையில்  தொழில் செய்யும்  இடத்திலேயே தாயார் கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

அவரது உடலைக்கூட மகள் பெறாத நிலையில் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று வியாழக்கிழமை (07) உயிரிழந்தவரின் சகோதரர் வருகை தந்ததை அடுத்து  யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

 இதில் அவர் அலரி விதை உட்கொண்டதால்  மரணம் சம்பவித்ததாக அறிக்கை யிடப்பட்டுள்ளது. சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.