மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

0
106

75வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு முன்னதாக, கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை மல்வத்து – அஸ்கிரிய தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். மல்வத்து மஹாவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, அஸ்கிரி மகா விகாரை மண்டபத்தில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.