2ம் எலிசபெத் மகாரணியின் இறுதிச் சடங்கு நாளை இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளார். மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் இலங்கையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி இன்று லண்டனைச் சென்றடைந்தார். 2ம் எலிசபெத் மகாரணியின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.