மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொடுக்க அரசு முன்வரவில்லை: ஹரிணி அமரசூரிய

0
259

மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் பொருளாதார அசௌகரியத்தை வேறு விடயங்களினால் தூண்டிவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கிடைக்கப்பெறும் கடனுதவிகள் மூலம் பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

இருப்பினும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்பெற்ற போதிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.