மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக நுவன் போப்பகே தெரிவு!

0
74

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போப்பகே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போப்பகே,

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் விடயம் பாரிய சவாலாகும். அந்த சவாலை எதிர்ககொள்ள நாம் தயாராகவுள்ளோம். மக்கள் எழுர்ச்சி ஆர்பாட்டத்தின் பிரதான நோக்கமாக முறைமை மாற்றம் காணப்பட்டது.
அந்த மாற்றத்தை ஏற்படுத்த எம்முடன் இணைந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அத்துடன், அந்த உண்மையான மாற்றத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வருமாறும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.