மக்கள் ஒன்றிணைந்து ஒரே குரலாக வீட்டுக்குச் செல்லுமாறு கூறிய ராஜபக்ஷ்விடமிருந்து பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தமக்கு எந்த விதமான தேவைகளும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களையும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டையும் கட்டி எழுப்புகின்ற இலக்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.
இதன்காரணமாக தற்போதைய அரசு அழுக்கு படிந்த அரசாக இருந்த போதிலும் அழுக்கு படியாத இலக்குடன் நாம் கலந்தாலோசித்து வருகின்றோம்.
எமது கறை படியாத இலக்குகளுடன் விளையாட வேண்டாம் என கறை படிந்த அரசுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டிய விடயம் பதவிகளுக்காக போட்டியிடுவதல்ல.
ராஜபக்ஷ வழிபாட்டுடன் பயணித்திருந்தால் எனக்கும் ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டிருக்கலாம்
52 நாட்கள் ஆட்சியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு என்னிடம் வேண்டப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே முடிவாக அதை ஏற்க மறுத்தோம். ஏனெனில் நாகரீகமான அரசியல் கலாச்சாரம் ஒன்று எம்மிடம் காணப்படுவதனாலேயாகும்
2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே கிடைத்தது.
அச்சந்தர்ப்பத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவருக்கு துரோகம் இழைத்து பிரதமர் பதவியை பெறுவதற்கு அப்போது தனக்கு எந்த தேவையும் காணப்படவில்லை.
அன்று பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தது சரியாக இருந்தால் இன்று முழு நாடும் வேண்டாம் என்று தெரிவித்தவரிடமிருந்து ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் சரியாகவே அமைய வேண்டும்.