மட்டக்களப்பின் சில பகுதிகள் முடக்கம்

0
326

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள சில வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.