மட்டக்களப்புக்கு விஜயம் செய்த, இலங்கைக்கான கனடாத் தூதுவர் எரிக் வோல்ஸ், சிவில் சமூக பிரதிநிதிகளை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அவர் விசேடமாகக் கேட்டறிந்தார்.
மயிலத்தமடு மாதவணை பிரச்சனையின் நிலவரங்கள், வாகரைப் பிரதேசத்தில் நடைபெற உள்ள இறால்ப் பண்ணை மற்றும் இல்மணைட் அகழ்வு விவகாரம், காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பிலும் கனேடியத் தூதுவர் கவனம் செலுத்தியதாக, சந்திப்பில் கலந்துகொண்ட, சிவில் சமூக பிரதிநிதியாக சிவயோகநாதன் எமது செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.