மட்டக்களப்பில்,சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில், விற்பனைக் காட்சிக் கூடம் திறந்து வைப்பு!

0
138

மட்டக்களப்பு மாவட்ட காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற கிராமப்புற
குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறு கைத் தொழில் முயற்சியளாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும்
விற்பனை நிலையமொன்று இன்று மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
மாவட்ட அபிவிருத்தி குழுவின் சிபாரிசுக்கு அமைய, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அனுசரணையில்,
நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஜித்குமார் யோகமலர் வழிகாட்டலில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 100 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் பயனடைவர்.
;நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கோட்ட முனை மெதடிஸ்த திருச்சபையின் அருட்பணி கே .ஜே அருள்ராஜ், பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம
பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.தரணிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல்
பணிப்பாளர் ஜெயரஞ்சனி கணேசமூர்த்தி, மன்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மதிரூபிணி உதயசுந்தரம், உட்பட
காவியா கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்