மட்டக்களப்பில் அநுரவுக்கு ஆதரவு கோரி, பிரசாரக் கூட்டங்கள்

0
52

தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து, மட்டக்களப்பில் நேற்றைய தினம் பிரசாரக் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

மட்டக்களப்பு வெற்றிக்கான மக்கள் சந்திப்ப எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

மட்டக்களப்பு ஓட்டமாவடியிலும், கல்குடா தொகுதி தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களால் பிரசாரக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்க தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலும்
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பங்கெடுத்தார்.