பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 50 வியாபாரிகள் மற்றும் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 60 நபர்களுக்கு எழுமாறாக ரபிட் அன்டிஜன் பரிசோதனை இன்று மட்டக்களப்பு பொதுச்சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனைகயில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வைத்திய சிகிச்சைக்காக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான வர்த்தகரின் வர்த்தக நிலையமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.