வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெற்றவேளை பொலிஸார் பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்தமையைக் கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் உட்பட அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.
சிவ பூஜைக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.





