மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவிகள்

0
292

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தெரிவு செய்யப்பட கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவகால அத்தியாவசிய பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்ச்சியான பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ‘ கிரேஸ் லைப் லைன் ‘ தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இந்த பிரசவகால அத்தியாவசிய பொருட்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி . இ .உதயகுமார் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தில் இன்று நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ‘ கிரேஸ் லைப் லைன் ‘ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.