32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் குளங்களின் வான்கதவுகள் திறப்பு

மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின 7 வான்கதவுகள் நேற்று திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரெட்ணம் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றதையடுத்து குளங்களில் நீர் நிறம்ப ஆரம்பித்துள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதே வேளை உன்னிச்சை குளத்தில் திறந்துவிடப்பட்ட நீரைத் தவிர 6 அங்குல அளவில் மேலதிக நீர் வான் போடுவதாகவும் தெரியவருகின்றது.

இருந்த போதும் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெயளியேற்ற வேண்டியதையடுத்து இந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உன்னிச்சை குளம் 33 அடி நீர் கொள்ளளவு செய்யக்கூடியதும், நவகிரிகுளம் 31 அடி நீர் கொள்ளளவு செய்யக்கூடியதும், றூகம்குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்ளளவு செய்யக்கூடியதுமான குளங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles