மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கூழாவடி திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவையாளர் மேற்கு பிரிவில் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 5 ஆம் திகதி முதல் அப்பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைக்கு அமைய குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில்
45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்
கொரோனா தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையில் ஏழு பேர் மரணமடைந்துள்ளதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரித்தார்.