மட்டக்களப்பில் சட்டவிரோத தேக்கு மரக்குற்றிகள் பறிமுதல்(PHOTOS)

0
338

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல நரக்கமுல்ல அரசாங்க வனபகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்காக உழவு இயந்திரத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது மரக்குற்றிகள் ஏற்றபட்ட உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த உழவு இயந்திரத்தின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.