மட்டக்களப்பில் நகர் பகுதியில் உள்ள
உணவகங்களில் திடீர் சோதனை

0
318

இலங்கை உணவு சட்டத்திற்கு அமைய பதிவு செய்யப்படாத நிலையில் பாவனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
தெரிவித்துள்ளனர்மனித நுகர்வுக்கு தீங்குவிளை விக்கக்கூடிய வகையில் உணவு வகைகளை கையாண்ட உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிற்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள உணவகங்களில் மனித நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாகவும், சுகாதாரத்திற்கு தீங்காக உணவுகள் கையாளப்படுவதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைக்க பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகங்களில் இன்று திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .இதன் போது மனித நுகர்வுக்கு தீங்குவிளை விக்கக்கூடிய வகையில் உணவு வகைகளை கையாண்ட உணவக உரிமையாளர்கள், மருத்துவ சான்றிதழ்கள் இன்றி பணியில் இருந்த உணவக ஊழியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முரணான வகையில் பதிவு செய்யப்படாத நிலையில் உணவுக்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக இது குறித்தும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்