மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் அவர்களின் வைத்திய கடமைகளை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களை வெளியிட்ட மருத்துவ உதவியாளர் சங்க தலைவர் ரவி குமுதேஸ்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களினால் ரவி குமுதேஸின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கி பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் முன்பாக மேற்கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ தகவல் தொடர்பாடல் வைத்திய அதிகாரி வைத்தியர் நவலோஜிதன் , தொற்றா நோய்களுக்கான வைத்திய அதிகாரி சிவநாதன் ,ஆரையம்பதி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கௌரிசங்கரன் உட்பட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
