பயணத்தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு நகருக்குள் வரும் நபர்களை அனுமத்திக்கும் வகையில் அடையாள அட்டை இலக்கம் பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நகருக்குள் அனாவசியமாக வருகை தரும் நபர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய மட்டக்களப்பு நகருக்குள் அனுமதிக்கும் செயல்பாடு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்தமூன்று நாட்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதிகளவான பொதுமக்கள் நருக்குள் வருகைதருகின்றமையை அவதானிக்க முடிகிறது.