மட்டக்களப்பில் பொலிஸார், இராணுவத்தினர் வீதிச் சோதனை

0
211

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீதிகளில் பயணிப்போரை தடுத்து நிறித்தி அவர்களின் அடையாள அட்டை மற்றும், உரிய அனுமதிப்பத்திரம் என்பன பொலிஸரால் சோதனை செய்யப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்தகங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவை கருதிய செயற்பாடுகள் மட்டும் நடைபெறுவதுடன், ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளது.