மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகவும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள்

0
262

60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சின்ன ஊறணி , பாலமீன் மடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள முதியோர்களுக்கான சினோ பாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் , பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயங்களில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டத்திற்கான கொவிட் – 19 சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் முன்னுரிமைக்கு அமைய ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.