மட்டக்களப்பில் விசேட சோதனை

0
236

மட்டக்களப்பு கல்லடி பாலம், அரசடி சந்தி, ஊறணி சந்தி போன்றவற்றில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது மட்டக்களப்புக்குள் நுழையும் வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் அனுமதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

தேவையற்ற வகையில் நடமாடியோருக்கு அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.