மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் கிராம மட்டத்தில் களஆய்வு

0
187

கிழக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்துடன் பிரண்டினா நிறுவன இணைந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் இறுதி பகுப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து கூட்டிணைப்பு மகாசங்கமாக ஒன்றிணைக்கும் யாப்பு ஆராயும் கலந்துரையாடலாக நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறீகாந்த் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் என் .தனஞ்சயன் , பெரண்டினா நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எஸ் .சிவராஜா உட்பட பிரதேச செயலாளர்களை ,உதவி பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.