மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை அரசாங்க அதிபர் விளக்கம்

0
4

நெல் அறுவடை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் மாவட்ட விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்களால் முறைப்பாடொன்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரணாக அரசாங்க அதிபர் அறுவடைக்கு அனுமளித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடளித்த பின்னர், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்தனர்.