மட்டக்களப்பு இலுப்படிச்சேனை-மாவடி ஓடை வீதி, மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு

0
80

காபெட் இடப்பட்டு, செப்பனிடப்பட்ட, மட்டக்களப்பு இலுப்படிச்சேனை- மாவடி ஓடை பிரதான வீதியை அமைச்சர் பந்துல குணவர்த்தன மக்களின் பாவனைக்காக நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையில்,வீதி திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலமாக புனரமைப்பின்றிக் காணப்பட்ட இவ் வீதியானது, அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் காபெட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.
வீதி திறப்பு நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.