மட்டக்களப்பு உன்னிச்சை நீர்பாசன திட்டத்தின் கீழ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பெரும்போகத்திற்கான விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விவசாய நடவடிக்கைகளுக்கான உள்ளீடுகளை விதைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திற்கான விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் இம்முறை உன்னிச்சை,மானாவாரி மற்றும் சிறிய நீர்பாசன திட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக விவசாய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.